பிரேக்கிங் நியூஸ்
இன்று கோவை செய்திகள் தமிழகம்

விஜய் சேதுபதி விவகாரம்.!கோவையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது வழக்கு பதிவு.!

விஜய் சேதுபதி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பதிவிட்டது அமைதியை தூண்டும் விதமாக உள்ளது என கோவை மாநகர போலீசார் அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இது குறித்து கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :-

கடந்த 7ஆம் தேதி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி தேவர் ஐயா அவர்களை இழிவுபடுத்தியதற்காக அவரை உதைப்பவருக்கு ரொக்க பரிசு 1001 வழங்கப்படும் என
தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

மேற்படி பதிவானது அமைதி மீறுதலை தூண்டும் உட்கருத்துடனும் , குற்றமுறு மிரட்டல் விடுத்ததாகவும் உள்ளது. எனவே பி1 கடைவீதி காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டம் 504,506( 1 )படி அர்ஜுன் சம்பத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

#Sponsored #Commercial | இந்தியாவின் முன்னணி பாரியாட்ரிக் அறுவைசிகிச்சை நிபுணர் மருத்துவர் பாலமுருகன் அவர்களின் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

The Thamizh News

கோவையில் யானை மீது ரயில் மோதிய சம்பவம்..! சிகிச்சை பெற்று வந்த யானை உயிரிழந்தது..!

The Thamizh News

பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று பிறந்த நாள்:- கோவையில் பாஜகவினர் கொண்டாட்டம்

The Thamizh News

Leave a Comment