பிரேக்கிங் நியூஸ்
ஆரோக்கியம் உணவு மருத்துவம் முகப்பு

முக்கலவை பொடி வைத்தியம் இத்தனை வியாதிகளை முறிக்கிறதா..?

நமது உடலுக்கு ஏற்படும் ஒவ்வொரு விதமான நோய்களுக்கும் ஆங்கில மருத்துவம் மட்டுமே தீர்வு கிடையாது. நம் முன்னோர்கள் நமக்காகக் கொடுத்து விட்டுச் சென்ற இயற்கை அல்லது சித்த மருத்துவங்களும் நல்ல பலன் கொடுக்கக் கூடியது. அந்த வகையில், முக்கலவை பொடி வைத்தியம் சிறந்த குணாதிசயங்களைக் கொண்டுள்ளது.

தயாரிக்கத் தேவைப்படும் பொருட்கள் :

* வெந்தயம் – 250gm
* ஓமம் – 100gm
* கருஞ்சீரகம் – 50gm

மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதைத் தனியாகக் கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாகக் கலந்து ஒரு கண்ணாடிக் குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக்கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்.

இதைச் சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

தினசரி இந்த கலவையைச் சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.

இக்கலவைப் பொடி வைத்தியத்தின் பலன்கள் :-

* தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது.

* இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.

* இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது.

* இருதயம் சீராக இயங்குகிறது.

* சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது.

* உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகிறது.

* எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.

 

* ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது.

* கண் பார்வை தெளிவடைகிறது.

* நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது.

* மலச்சிக்கல் நீங்குகிறது.

* நினைவாற்றல் மேம்படுகிறது.கேட்கும் திறன் அதிகரிக்கிறது.

* பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.

* மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது.

* ஆண், பெண் சம்பந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது.

* நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது.

* அதனால் வரும் புண்கள் விரைவில் ஆறிவிடும்.

* இந்த கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது.

 

 

நன்றி,

வெள்ளியங்கிரி மழைச்சாரல் மூலிகை வனம்!

Related posts

கோவையில் வேட்டையாடப்பட்ட உடும்புகள்..!

The Thamizh News

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வழியாக தமிழகம் வரும் அனைவருக்கும் இ-பாஸ் கட்டாயம்..!தமிழக அரசு..!

The Thamizh News

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலக் குழு நடத்தும் கலை இலக்கியச் சமூகத்தின் கோரிக்கை சாசன வெளியீட்டு நிகழ்வு..!

The Thamizh News

Leave a Comment