இந்த காலத்தில் எப்பேற்பட்ட நோயாக இருந்தாலும், அதற்கு ஆங்கில மருந்துகள் இருக்கும். மீறி, புதியவகை நோய் அறிமுகமானாலும், அதற்கும் சில நாட்கள் அல்லது மாதங்களில் மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடித்து விடுகிறோம்.
அப்படி மருந்துகளைக் கண்டுபிடித்து அதனை எடுத்துக் கொண்டாலும், நாம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களுக்கு அந்த வியாதிகளைக் குணப்படுத்தும் குணாதிசயங்கள் உள்ளன.
அந்த வகையில், பூண்டு மிளகாய் வைத்தியம் பற்றித்தான் இப்போது காண்கிறோம்.
தேவையான பொருட்கள் :
தீயில் சுட்ட பூண்டு – 10 பல்
தீயில் சுட்ட வரமிளகாய் – 5
நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
வரமிளகாய் மற்றும் பூண்டு இரண்டையும் சிறிது சிறிதாக அறுத்து நல்லெண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துப் பிசைய வேண்டும். பிறகு, ஒரு கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்து, இட்லி முதல் சாதம் அனைத்து வகையான உணவுகளிலும் தொட்டுச் சாப்பிடலாம்.
ஒரு முறை செய்த இக்கலவையை 20 நாட்கள் வைத்துச் சாப்பிடலாம்..
பலன்கள்…
தேவையற்ற கொழுப்புகளை அகற்றி வாய்வு பிரச்சினையைத் தீர்க்க ஓர் அற்புதமான மருத்துவ பொருள். உணவை எளிதில் ஜீரணம் செய்து பசித்தூண்டுதலை அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல், ஆண்களுக்குத் தாது பலம் அதிகரிக்கும்.