பிரேக்கிங் நியூஸ்
ஆரோக்கியம் கோவை மருத்துவம்

கோவையில் சிறப்பாக செயல்பட்டு வரும் சித்த மருத்துவ சிகிச்சை மையம்..! மருத்துவம், யோகா, சூரிய குளியல், மனநல கல்வி என பல சிறப்பு அசத்தல்கள்..!

கோவை காந்திபுரத்தில் உள்ள மாநகராட்சி கல்யாண மண்டபத்தில் பல ஆரோக்கியமான சிறப்பு திட்டங்களுடன் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.

கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உத்தரவின் பேரில் மாவட்ட சித்த மருத்துவர் சி.தனத்தின் மேற்பார்வையில் கோவை மாநகராட்சியில் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சீனிவாசபுரம் மாநகராட்சி கல்யாண மண்டபத்தில் தனி சித்தமருத்துவ சிகிச்சை மையம் கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதி முதல் 50 படுக்கை வசதிகளுடன் இயங்கி வருகிறது. இதில் இந்நாள்வரை 119 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இம்மையத்தில் அமுக்கரா மாத்திரை, தாளி சாதி வடகம், ஆடாதோடை மணப்பாகு, கபசுர குடிநீர்,நிலவேம்பு குடிநீர் போன்ற உள் மருந்துகளுடன் சிறப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலிகை தேநீர்,மூக்கு பாதையை சீர் செய்ய நீராவி சிகிச்சை, நுரையீரல் காக்கும் யோகப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, வாசனை திறனை மீட்டெடுக்க ஓமப் பொட்டணம் போன்ற சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது.

கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தின் தனிசிறப்பு :-

காலை :

*சித்த யோகப்பயிற்சி

*காந்தி சுட்டிகை என்னும் சூரியக்குளியல்

மாலை :

*எளிய நடைப்பயிற்சி..

இரவு :
தினம் ஒரு தலைப்பில் பாடம்

*உடல்நல மனநலக் கல்வி

*ஃபிட்னஸ் மேனேஜ்மென்ட்

*போஸ்ட் கோவிட் -19 நிர்வாகம்

*சித்த மருத்துவ உணவியல் வாழ்வியல் பயிற்சிகள்

*மனம் விட்டு பேசும் நிகழ்வு

*வாழ்வியல் நோய்கள் பாதுகாப்பு

சிகிச்சை முறைகள் :-

தொடர்ந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் பொழுது அவர்களுக்கு உடல் வன்மையை மேம்படுத்த அமுக்கரா மாத்திரை , நெல்லி இளகம் அடங்கிய ஆரோக்கியப் பெட்டகம் கொடுத்து அனுப்பப்படுகிறது.

Related posts

தேருக்கு பதிலாக பசியாற்றும் பணி..! புனித அந்தோணியார் தேர் திருநாளையொட்டி 2000 பேருக்கு சிக்கன் பிரியாணி..!

The Thamizh News

1,500 நபர்களுக்கு பசும்பால் வழங்கிய தமுமுகவினர்..!

The Thamizh News

வேலைக்கு வரும் பெண்ணிடம் ஆபாசமாக நடப்பதா..? கோவையில் பாடம் புகட்டிய உறவினர்கள்.!

The Thamizh News

Leave a Comment