பிரேக்கிங் நியூஸ்
கோவை செய்திகள் தமிழகம் பிரேக்கிங் நியூஸ் முகப்பு

கோவையிலிருந்து ஆட்சிப் பணிக்கு தேர்வாகியுள்ள மாற்றுத் திறனாளி இளைஞர் ரஞ்சித்.!கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என ரஞ்சித்தின் தாய் மகிழ்ச்சி.!

இந்திய ஆட்சிப் பணிக்கு கோவையிலிருந்து மாற்றுத்திறனாளி ஒருவர் தேர்வாகியுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான அதிகாரிகளைத் தோ்வு செய்வதற்காக கடந்த ஆண்டு நடைபெற்ற தோ்வுகளின் இறுதி முடிவுகளை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

இதில் தமிழ்நாட்டில் இருந்து பலர் தேர்வாகியுள்ள நிலையில் கோவையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி இளைஞர் தேர்வாகி இருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை அவிநாசி சாலையை சேர்ந்தவர் ரஞ்சித்.  மாற்றுத்திறனாளியான இவர் இந்திய ஆட்சிப் பணி தேர்வு எழுதி தேர்வாகியுள்ளார்.

இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் “கோவையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி இளைஞர் ரஞ்சித் தேர்வு பெற்றதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.”

இதற்கு ரஞ்சித்தின் தாய் பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஞ்சித்தின் தாயார் அமிர்தவள்ளி கூறும்போது :-

முதல்வரின் பாராட்டு எனது மகனையும் எங்கள் குடும்பத்தாரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாங்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம். ரஞ்சித் தினமும் 14 மணி நேரத்திற்கு மேல் படிப்பதில் நேரத்தை செலவிட்டார்.

ரஞ்சித் சாதிக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையில் முயற்சி செய்தார். தற்போது வெற்றி அடைந்துள்ளார்.

அவருக்கு சிறுவயதில் நான் கல்வி கற்க உதவி உள்ளேன். தற்போது அவரே படித்துக் கொண்டார். அவர் தன்னால் முடியும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

தினம் ஒரு திருக்குறள் : தி தமிழ் நியூஸ்

The Thamizh News

காணாமல் போன மூதாட்டியை மீண்டும் குடும்பத்துடன் சேர்த்து வைத்த நிகழ்வு..!

The Thamizh News

கோவை வன மண்டலத்தில் தொடரும் யானைகள் உயிரிழப்பு : 15 பேர் கொண்ட வல்லுனர்கள் குழு அமைப்பு

The Thamizh News

Leave a Comment