நம் முன்னோர்கள் நமக்கு கற்றுத் தந்த பாரம்பரிய பழக்க வழக்கங்கள் நாளுக்கு நாள் அழிந்து கொண்டே வருகின்றன. தற்போது, ஏதேனும் பழங்காலத்து முறையை யாரேனும் மேற்கொள்வதை நாம் பார்த்தால், அதனைப் புகைப்படம் எடுத்து ஏதோ விநோதம் போல சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுக் கொள்கிறோம். ஆனால், இவையனைத்தும் நம் முன்னோர்கள் தினமும் செய்து வரும் அன்றாட நிகழ்வுகள் என்பதை மறந்து விடுகிறோம்.
அப்படி, மறந்த அல்லது மறக்கடிக்கப்பட்ட பழக்கமான எண்ணெய் குளியல் பற்றி தற்போது பார்க்க இருக்கிறோம். அதாவது,
பெண்கள் பொதுவாக வாரம் இருமுறை எண்ணெய் குளியலைக் கடைப்பிடிக்க வேண்டும். அதுவும், குறிப்பாகச் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் கடைப்பிடிக்க வேண்டும். ஆண்கள் புதன், சனிக் கிழமைகளிலும் காலை எந்த உணவும் உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். வெயில் அடிக்கும்போது மட்டுமே எண்ணெய் குளியல் வேண்டும். எள் எண்ணெய் தான் உபயோகப்படுத்த (நல்லெண்ணெய்)
- எண்ணெய் 150 மிலி
- இஞ்சி சிறிய துண்டு
- மிளகு 10
- பூண்டு 4 பல்
- சீரகம் அரை டீஸ்பூன்
- வறுத்த அரிசி அரை டீஸ்பூன்
- 1 வரமிளகாய் … எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவை அனைத்தும் சேர்த்து சூடுபடுத்தி உடல் முழுவதும் தேய்த்து வெயிலில் 5 நிமிடங்கள் நிற்க, சிறிது நேரத்தில் உடல் மீது வியர்வை துளிகள் வந்த பின்பு, சுடு தண்ணீரில் தான் குளிக்க வேண்டும். சீயக்காய் தலைக்கும், உடலுக்கு
பாசிப்பயறு மாவு, கடலைமாவு, அரிசிமாவு மூன்றும் சேர்த்து தேய்த்துக் குளிப்பது மிகவும் சிறந்தது. அன்று மட்டும் பகலில் படுத்து உறங்கக்கூடாது.
மறுநாள் முதல் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். வாரம் ஐந்து முறை கீரைகளை உண்ண வேண்டும்.. இதைச் சரியாக நடைமுறைப்படுத்தினால் பெண்களுக்கு உண்டாகும் அனைத்து விதமான ஆரோக்கிய குறைபாடுகளும் நீங்கி ஆரோக்கியமாகும்.