பிரேக்கிங் நியூஸ்
Coimbatore கோவை செய்திகள் தமிழகம் முகப்பு

உன்னிச் செடியை அழிக்க பெரும் பாடுபடும் வனத்துறை.! கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உன்னிச் செடியை வளர்ப்பது சரியா..??

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உன்னிச்செடியை வளர்ப்பது தொடர்பாக கேள்வி எழுப்பி செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

அதில் கூறியுள்ளதாவது :-

கோவை வாலாங்குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கரையில் நடப்பட்டுள்ள செடிகளில் அந்நிய தாவரமான உன்னிச்செடி (Lantena) நடப்பட்டுள்ளது. இத்தாவரம் அதிவேகமாக பரவுவதாலும் மற்ற தாவரங்களை ஆக்கிரமிப்பதாலும் தமிழக வனத்துறையினர் இத்தாவரத்தை அழிக்க பல கோடிகளில் திட்டம் தீட்டி அழிப்பதற்கு பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

இக்குளக்கரையில் வைத்துள்ள இத்தாவரத்திலிருந்து விதைகள் உபரி நீர் வழியாக ஆற்றங்கரைகள் மற்றும் விவசாய நிலங்களில் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது. மற்றும் பறவைகள் இத்தாவரத்தின் பழங்களை உண்பதாலும் பரவும் அபாயம் உள்ளது.
ஆகவே இத்தாவரத்தை அகற்றி மாற்றாக நம் நாட்டு மலர்செடிகளை நடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் உக்கடம் – சுங்கம் புறவழிச்சாலையில் இரயில்வே பாலத்துக்கு கீழ் உள்ள பூங்காவில் நடப்பட்டுள்ள தாவரங்களுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகை கைகளில் தவறான பெயர்கள் இடம்பெற்றுள்ளன. உதாரணத்திற்கு நாம் நன்கறிந்த மூங்கில் தாவரத்திற்க்கு பதிலாக மருது என பலகை அச்சிட்டு வைத்துள்ளனர். இது போன்று வெண் நொட்சி, காயா, பவளகுறிஞ்சி, இஞ்சி, காட்டு கொஞ்சி, வேல் வாகை, கள்ளி மலர்,நீர்க்குளிரி, என அச்சிடப்பட்டு வைக்கப்பட்டுள்ள அனைத்தும் வேறு பெயர்கள் கொண்ட தாவரங்களின் மத்தியில் வைக்கப்பட்டுள்ளன.

இங்கு குழந்தைகள், மற்றும் மாணவ மாணவியர்கள் வந்துசெல்லும் இடத்தில் தவறான பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது. எனவே தவறான முன்னுதாரணத்தை தவிர்க்க கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கோவை வந்த விமானம்..! பேஸ்ட் வடிவில் கடத்திவரப்பட்ட தங்கம்..!

The Thamizh News

பாம்பை வெட்டி சமையல் செய்யும் இளைஞர்கள்;- வெளியான வீடியோ காட்சியால் பரபரப்பு

The Thamizh News

கோவையில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு..! மக்கள் கூட்டம் அலைமோதுவதால் கொரோனா தொற்று பரவும் அபாயம்!

The Thamizh News

Leave a Comment