பிரேக்கிங் நியூஸ்
ஆரோக்கியம் மருத்துவம் முகப்பு

தோல் நோய்ப் பாதிப்பு இருக்கா…? அப்போ புற்றுமண் குளியலை Try பண்ணுங்க…!!

நமது உடலுக்கு ஏற்படும் ஒவ்வொரு விதமான நோய்களுக்கும் ஆங்கில மருத்துவம் மட்டுமே தீர்வு கிடையாது. நம் முன்னோர்கள் நமக்காகக் கொடுத்து விட்டுச் சென்ற இயற்கை அல்லது சித்த மருத்துவங்களும் நல்ல பலன் கொடுக்கக் கூடியது. அப்படியொரு சிகிச்சை முறையைத்தான் இப்போது பார்க்கப்போகிறோம். தோல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, புற்றுமண் குளியல் முறை வரப்பிரசாதமாகும்.

புற்றுமண் குளியல் முறை அனைத்து விதமான தோல் சம்பந்தமான வியாதிகளுக்கும், உடல் நிறத்தை மாற்றுவதற்கும் புற்று மண் சிறந்தது. உடலில் சேறும் அசுத்தங்களை வெளியே கொண்டு செல்லும் அற்புதமான பொருள் புற்று மண். மனிதனாகப் பிறந்த அனைவருமே புற்று மண் குளியல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

புற்று மண் குளியல் எடுக்க வேண்டிய நாளைக்கு முதல் நாள் இரவே மண்ணை நீரில் குழைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இது மண்ணை குளிர்ச்சி அடைய வைத்து தோலுக்குத் தேவையான நல்ல பாக்டீரியாக்களை வளர்ச்சி அடைய வைக்கிறது. பகல் 12 மணிக்கு முன்னர் எடுக்க வேண்டும். மிகக் குறைந்த அளவு ஆடைகளே அணிய வேண்டும்.

தலை உட்பட எல்லாப் பகுதிகளிலும் மணலை பூசிக் கொள்ள வேண்டும். புண்களிலும் பூசலாம். சூரிய ஒளியில் நிற்க வேண்டும். அரை மணி நேரத்திற்குப் பிறகு (அ) மணல் முழுமையாகக் காய்ந்த பிறகு, நிழலில் அரை மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும். பிறகு பச்சைத் தண்ணீரில் குளிக்கவும். சோப்பு, ஷாம்பூ, சிகைக்காய் எதுவும் தேவையில்லை. மணலையே நன்றாகத் தண்ணீர் சேர்த்துத் தேய்த்து மெதுவாக மசாஜ் செய்து குளிக்கவும்.

கழிவுகள் இம்முறையில் வெளியேறும். வியர்வைத் துளைகள் சுத்தமாகும். பிரஷ்ஷாக இருக்கும். தோல் வியாதிகளான சொரியாஸிஸ், வெண் குஷ்டம் மற்றும் நரம்பு பிரச்சனைகள், வாதம், தொழு நோய் போன்றவற்றிற்கு இது நல்ல பலன் தரும்.

Related posts

தினம் ஒரு திருக்குறள் : தி தமிழ் நியூஸ்

The Thamizh News

அமெரிக்க இதழில் பதிப்பாகும் தமிழக ஆராய்ச்சியாளரின் கட்டுரை

The Thamizh News

கோவையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயற்சி செய்த 4-மூதாட்டிகள்!

The Thamizh News

Leave a Comment