பிரேக்கிங் நியூஸ்
ஆரோக்கியம் மருத்துவம் முகப்பு

மாரடைப்பு வராமல் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது எப்படி..?

இந்த காலத்தில் எப்பேர்ப்பட்ட நோயாக இருந்தாலும், அதற்கு ஆங்கில மருந்துகள் இருக்கும். மீறி, புதியவகை நோய் அறிமுகமானாலும், அதற்கும் சில நாட்கள் அல்லது மாதங்களில் மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடித்து விடுகிறோம்.

அப்படி மருந்துகளைக் கண்டுபிடித்து அதனை எடுத்துக் கொண்டாலும், நாம் கடைப்பிடிக்கும் உணவு முறைதான், அந்த மருந்தின் வீரியத்தை நமது உடலில் முழுவதுமாக செலுத்துகிறது.

அந்த வகையில், இருதய பலவீனம், மாரடைப்பு வராமல் பாதுகாக்க என்னென்ன உணவு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை தற்போது காணலாம்.

சரியாகக் காலையில் வெறும் வயிற்றில் வில்வம், துளசி இதழ்களுடன் மிளகு சேர்த்து நன்றாக மென்று விழுங்கவும். பத்து வயதிற்கு ஒரு மிளகு என்ற கணக்கில் மிளகைச் சேர்த்துக் கொள்ளவும். ஒரு மணி நேரம் கழித்து, காலை உணவாகப் பொன்னாங்கண்ணி அல்லது வல்லாரைக் கீரை இவற்றில் ஏதாவது ஒன்றைப் பருப்புப் போட்டோ, பருப்பு சேர்க்காமலோ சமைத்து உண்ணலாம்.

சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு டம்ளர் கேரட் சூப் பருகவும். பின்னர், பத்து பாசுமதி அரிசியை லேசாக வாணலியில் வறுத்து நீரில் கலந்து குடித்து விடவும்.
மீண்டும் சிறிது நேரம் கழித்து ஐந்து சின்ன வெங்காயத்தை (சாம்பார் வெங்காயம்) தண்ணீரில் வேக வைத்து ஆறியவுடன் வெங்காயத்தை நீருடன் சேர்த்துச் சாப்பிட்டு விடவும்.

வாரம் ஒரு முறையாவது மிதமான சுடுநீரில் வேப்பிலை போட்டுக் குளித்து வரவும். திங்கட் கிழமை அன்று ஐந்து பல் நாட்டுப் பூண்டில் நெய் தடவி லேசாக வதக்கி உண்ணவும்.

ஒவ்வொரு செவ்வாய்க் கிழமைகளில் கேழ்வரகு தோசையும், வெள்ளி சனி, ஞாயிறு கிழமைகளில் பகல் முழுவதும் பழங்களை உட்கொண்டு, இரவு மட்டும் சோள தோசையும், புதன் கிழமை கம்பு தோசையும் உண்டு வரவும்.

Related posts

தினம் ஒரு திருக்குறள் : தி தமிழ் நியூஸ்

The Thamizh News

வணிக வாகனங்களின் பிரதிபலிப்பு ஸ்டிக்கர்‌ விவகாரம் : பழைய நடைமுறையைத் தொடர வலியுறுத்தி மனு!

The Thamizh News

தினம் ஒரு திருக்குறள் : தி தமிழ் நியூஸ்

The Thamizh News

Leave a Comment