பிரேக்கிங் நியூஸ்
கோவை செய்திகள் தமிழகம் பிரேக்கிங் நியூஸ் முகப்பு

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அமரர் ஊர்தியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து.!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இலவச அமரர் ஊர்தியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

கோவை அரசு மருத்துவமனையின் பிணவறைக்கு வரும் உடல்கள் இலவச அமரர் ஊர்தி மூலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.


இதனால் இந்த ஊர்திகள் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்படுவது வழக்கம். இப்படி மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிணவறை அருகே நிறுத்தப்பட்டிருந்த அமரர் ஊர்தி இன்று இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது. பின்னர் அப்பகுதியில் இருந்தவர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். பின்னர் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.


மேலும் பந்தய சாலை போலீசார் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ பற்றும் போது அருகிலிருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டதால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது.

Related posts

கல்லூரி இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிச.7 ஆம் தேதி முதல் தொடக்கம் : டிச., மாத தளர்வுகளின் முழுவிபரம்..!!

The Thamizh News

கொரோனாவால் ‘ஸ்மைல் பிளிஸ்’ இழந்துள்ள புகைப்பட கலைஞர்களின் வாழ்வாதாரம் முன்னேறத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

The Thamizh News

#Sponsored #Commercial | Healthy Habits | விரைவில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கும் | 9 வகையான சுவைகளில் உலகத்தரம் வாய்ந்த கத்தாழை குளிர்பானம்

The Thamizh News

Leave a Comment