பிரேக்கிங் நியூஸ்
Coimbatore செய்திகள் தமிழகம்

நீரிழிவு நோயை குணப்படுத்த முடியுமா.? ஆதாரத்துடன் விளக்கும் மருத்துவர் பாலமுருகன்.!

கட்டுரை : Dr.S. பாலமுருகன்,

பேரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்.

நீரிழிவு நோய் என்பது உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றமாகும். இந்த வளர்சிதை மாற்றத்தினால் உடல் எடை நாளடைவில் அதிகரிக்கும். இவை இரண்டும் வாழ்க்கை முறை தொடர்பான நோய்கள், மேலும் இந்த கூட்டு நோய்களின் பரவல் சமீபமாக அதிகரித்து வருகிறது.

உலகளவில் நீரிழிவு நோயில் இந்தியா 2 வது இடத்தில் உள்ளது. மேலும் அதிக எடை அல்லது உடல் பருமனானவர்களுக்கு நீரிழிவு நோயின் ஆபத்து காரணிகள் 10 மடங்குக்கு மேல் அதிகரிக்கும். விஞ்ஞான ரீதியாக, நீரிழிவு நோய் என்பது கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கலோரிகளைப் பற்றியது ஆகும்.

உடல் பருமன் என்பது கலோரிகள் மற்றும் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைப் பற்றியது என்றும் குறிப்பிடப்படுகிறது.

நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் எவ்வாறு தொடர்புடையது?

உடம்பில் உள்ள அதிகப்படியான கொழுப்பு, இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்துகிறது மற்றும் உடல் எடையும் அதிகரிக்கும். இது குடல் ஹார்மோன்கள் சமநிலையின்மைக்கு வழிவகுக்கிறது மற்றும் கணையத்தின் பீட்டா(β) செல்களில் இன்சுலின் சுரப்பு குறைகிறது. இதனால் லெப்டினின் (leptin) ஹார்மோன் செயல்பாடு அதிகரித்து, இன்சுலின் சுரக்கும் கணையத்தின் செயல்பாடு பலவீனமடைகிறது. இதனால்தான் நீரிழிவு நோய் உடல் பருமன் உள்ளவர்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது.

பேரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்று அறுவை சிகிச்சை மூலம் நீரிழிவு நோயை குணப்படுத்த முடியுமா ?

பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையின் மூலம் உட்கொள்ளும் உணவின் அளவு குறைக்கப்படுவதால் அதன் கலோரிகளும் கட்டுப்படுத்தப்படும். எடுத்துக்கொள்ளும் உணவு நேராக ​​​​சிறுகுடலுக்கு போய் சென்றடையும், மேலும் இந்த பைபாஸ் மாற்றம் லெப்டினைக் (leptin) குறைத்து இன்க்ரெடினின் (incretin) செயல்பாட்டை அதிகரிக்கிறது, இதனால் கணையத்தில் இன்சுலின் சீராக சுரக்கப்படுகிறது.

பேரியாட்ரிக் அறுவைசிகிச்சைக்குப் பிறகு உணவுக் கட்டுப்பாடுகள் காரணமாக – உடல் எடையைக் குறைப்பதன் மூலம் உடல் கொழுப்புகள் குறைகிறது, இதனால் இன்சுலின் எதிர்ப்பும் குறைகிறது.இந்த இரண்டு கோட்பாடுகள் வழியே பேரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்று அறுவை சிகிச்சை மூலம் நீரிழிவு நோயை குணப்படுத்த முடியும்.

பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையின் நன்மைகள் என்ன?

பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்குப் பிறகு 1 வருடம் முதல் 2 ஆண்டுகள் வரை சமசீரான எடை குறையும். இதன் காரணமாக கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயின் அளவு 1 வருடத்திற்க்குள் சமநிலைக்கு கொண்டுவரப்படுகிறது.

பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையானது உயர் இரத்த அழுத்தம் / தூக்கத்தில் மூச்சுத்திணறல் / மலட்டுத்தன்மை பிரச்சனைகள் / முழங்கால் அல்லது மூட்டுவலி போன்ற பிற நோய்களை தீர்க்க உதவுகிறது. மேலும் நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.
இந்த அறுவைசிகிச்சை லேப்ராஸ்கோப்பி முறையில் செய்யப்படுகிறது, எனவே அறுவை சிகிச்சைக்குப் பிறகு 4-5 நாட்களில் நோயாளிகள் வழக்கமான பணிகளை செய்ய முடியும்.

பேரியாட்ரிக் அறுவைசிகிச்சையின் மூலம் யார் பயனடைவார்கள்?

பிஎம்ஐ (BMI)- 27.5 kg/m2 க்கு மேல் கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் உள்ளவர்கள்.
பிஎம்ஐ (BMI) – 30 kg/m2 க்கு மேல் நீரிழிவு நோய் உள்ளவர்கள்.
பிஎம்ஐ (BMI) – 35 kg/m2 க்கு மேல் உள்ளவர்கள்.

பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்கு காப்பீடு திட்டம் கிடைக்குமா?

ஆம், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பல காப்பீட்டு நிறுவனங்கள் இப்போது பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் அளித்து வருகின்றன.

நோயாளியின் சான்று :-

நோயாளியின் பெயர்: பத்மாவதி,
வயது: 56 வயது
பாலினம்: பெண்
தொழில் – ஆசிரியர்
உயரம்: 146 செமீ
எடை: 86 கிலோ
பிஎம்ஐ – 41.7கிலோ/மீ2
சிறந்த உடல் எடை – 41 கிலோ
அதிக உடல் எடை – 45 கிலோ

இணை நோய்கள் : இரண்டாம் வகை நீரிழுவு நோய், தூங்கும் போது குறட்டை விடுதல் (Sleep Apnea), உயர் இரத்த அழுத்தம், டிஸ்லிபிடெமியா(Dyslipidemia), இருதய இரத்த குழாய் அடைப்பு (Coronary Artery Disease), மூன்றாவது வகை உடல் பருமன் மற்றும் சுவாச செயலிழப்பு வகை.

அறுவை சிகிச்சைக்கு முன் பத்மாவதி நீரிழிவு நோய் ஒரு பரம்பரை நோய் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார்.மேலும் தனது பெற்றோர் நீரிழிவு நோயால் பாதிகாதவர்கள் என்பதால் அது அவரை பாதிக்காது என்றிருந்தார்.

ஆனால் உடல் எடை அதிகரிக்க மற்றும் உடலில் ஏற்ப்பட்ட வளர்சிதை மாற்றத்தினால் நீரிழுவு நோய் வர ஆரம்பித்தது.
இதைத்தொடர்ந்து
நீரிழிவு நோயைக் குணப்படுத்தவும் மற்றும் உடல் எடை குறைக்கவும் பேரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்று அறுவை சிகிச்சையை பரிந்துரைத்தேன்.
இந்த அறுவை சிகிச்சைக்கு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மருத்துவ காப்பிடு திட்டம் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அறுவைசிகிச்சைக்குப் பிறகு அவரால் முதல் நாளில் நடக்க முடிந்தது, இரண்டாவது நாளிலிருந்து சீரான தூக்கம் கிடைத்துள்ளது. தொடர்ந்து எடை குறைந்து சுறுசுறுப்பாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் உள்ளார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு 30 நாட்களில் சுமார் 10 கிலோ உடல் எடை குறைந்திருப்பதாக தெரிவித்த அவர் காலமுழுவதும் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயுடன் வாழ வேண்டிய அவசியம் இனி எனக்கில்லை என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்தக் கட்டுரையில் ஏதேனும் கேள்விகள் இருந்தால், ஆசிரியரைத் தொடர்பு கொள்ளவும்.

மேலும் கூடுதல் தகவலுக்கு

Dr.S. பாலமுருகன்,
பேரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்,PSG மருத்துவமனை, பீளமேடு, கோயம்புத்தூர் – 641004,

தொலைபேசி எண்: 99440 44666.

மின்னஞ்சல்: bariatricsurgery.psg@gmail.com.

Related posts

கோவைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வலியுறுத்தல்..! முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ள பி.ஆர். நடராஜன் எம்.பி,.

The Thamizh News

வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுக, திமுக கட்சியினர் மாறிமாறி கோஷம்..!

The Thamizh News

கொரோனா போய் பன்றிக் காய்ச்சலா.? கோவையில் இருவர் பாதிப்பு.! மீண்டும் வலியுறுத்தப்படும் முகக் கவசம்!

The Thamizh News

Leave a Comment