பிரேக்கிங் நியூஸ்
அரசு அறிவிப்புகள் செய்திகள் தமிழகம் முகப்பு

டிச.19ம் தேதி முதல் திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்தத் தமிழக அரசு அனுமதி

வரும் 19ம் தேதி முதல் திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கொரோனா வைரஸ்‌ நோய்த்‌ தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின்‌ வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர்‌ மேலாண்மைச்‌ சட்டத்தின்‌ கீழ்‌, தமிழ்நாட்டில்‌ 25.3.2020 முதல்‌ ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன்‌ அமலில்‌ இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின்‌ அரசு, இந்த நோய்த்‌ தொற்றிலிருந்து மக்களைக் காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன்‌ செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின்‌ சிறப்பான செயல்பாட்டினாலும்‌, பொதுமக்களின்‌ ஒத்துழைப்பினாலும்‌ தான்‌ நோய்‌ தொற்று கட்டுப்பாட்டுக்குள்‌ கொண்டுவரப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ளரங்கு கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில்‌, தற்போது நிலையான வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி, திறந்தவெளியின்‌ அளவிற்கேற்ப சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும்‌ வகையில்‌ அதிகபட்சம்‌ 50 சதவிகித அளவிற்கு மிகாமல்‌ பங்கேற்பாளர்கள்‌ பங்கேற்கும்‌ வண்ணம்‌ சமுதாய,
அரசியல்‌, விளையாட்டு, கல்வி, கலாச்சார, பொழுதுபோக்கு மற்றும்‌ மதம்‌ சார்ந்த கூட்டங்கள்‌ 19.12.2020 முதல்‌ நடத்த அனுமதிக்கப்படுகிறது.

இக்கூட்டங்களுக்குச் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்‌ தலைவர்களிடமும்‌, சென்னை மாநகராட்சியில்‌ காவல்துறை ஆணையர்‌ அவர்களிடமும்‌ உரிய முன்‌ அனுமதி பெறுவது அவசியம்‌. பொதுமக்கள்‌ வெளியே செல்லும்போதும்‌, பொது இடங்களிலும்‌ கண்டிப்பாக முகக்கவசம்‌ அணிய வேண்டும்‌. பொதுமக்கள்‌ வீட்டிலும்‌, பணிபுரியும்‌ இடங்களிலும்‌ அடிக்கடி சோப்பைப் பயன்படுத்தி கை கழுவியும்‌, சமூக இடைவெளியைத் தவறாமல்‌ கடைப்பிடித்தும்‌, அவசிய தேவை இல்லாமல்‌ வெளியில்‌ செல்வதைத்‌ தவிர்த்தும்‌, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால்‌ தான்‌, இந்த நோய்த்‌ தொற்றுப்‌ பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்‌.

எனவே, பொது மக்களின்‌ நலன்‌ கருதி, உங்கள்‌ அரசு எடுத்து வரும்‌ கோவிட்‌ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ அனைத்திற்கும்‌ பொதுமக்கள்‌ தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தினம் ஒரு திருக்குறள் : தி தமிழ் நியூஸ்

The Thamizh News

குடியரசு தின நாளில் நடக்கும் கிராம சபைக் கூட்டம் ரத்து : தமிழக அரசு அறிவிப்பு

The Thamizh News

யானைக்குத் தீவைத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது விரைவாகக் குண்டர் சட்டம் பாய வேண்டும் – வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையினர் கோரிக்கை!

The Thamizh News

Leave a Comment