பிரேக்கிங் நியூஸ்
கொரோனா வைரஸ் கோவை செய்திகள் தமிழகம் பிரேக்கிங் நியூஸ் முகப்பு

கோவையில் இன்றும் 200ஐ கடந்தது கொரோனா பாதிப்பு – முழு நிலவரம்

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று 217 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:

கோவையில் இன்று 217 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 224 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 2 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் தற்போது  2 ஆயிரத்து 191 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையில் இதுவரை 2 லட்சத்து 37 ஆயிரத்து 729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 283 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்  ஆயிரத்து 544 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 26 லட்சத்து 25 ஆயிரத்து 778 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கோவையில் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை.! நீட்டை தொடர்ந்து பொறியியல் தகுதித் தேர்வின் அச்சமா.?

The Thamizh News

குழந்தை இல்லாததால் ஏக்கம் : காதல் திருமணம் செய்த இளம் தம்பதி தற்கொலை

The Thamizh News

தினம் ஒரு திருக்குறள் : தி தமிழ் நியூஸ்

The Thamizh News

Leave a Comment