பிரேக்கிங் நியூஸ்
கோவை செய்திகள் தமிழகம் முகப்பு

கோவையில் கொரோனா பரவல் எதிரொலி : சுப நிகழ்ச்சிகள் தொடர்பான விவரங்களை மாநகராட்சி இணையதளத்தில் தெரியப்படுத்த வேண்டும்

கோவையில் கொரோனா பரவல் எதிரொலியாக மாநகரில் நடக்கும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் தொடர்பான விவரங்களை மாநகராட்சி இணையதளத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில்‌ கொரோனா நோய்த்‌ தொற்று பரவலைத்‌ தடுக்கும்‌ நடவடிக்கைகளை மேற்கொள்ளும்‌ வகையிலும்‌, பரவி வரும்‌ உருமாறிய கொரோனா ஓமைக்கரான்‌ வைரஸ்‌ நோயை கருத்தில்‌ கொண்டும்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ நலன்‌ கருதியும்‌ தமிழ்நாடு அரசு மாநிலம்‌ முழுவதும்‌ 6ம் தேதி முதல் முதல்‌ வார நாட்களில்‌ இரவு 10 மணி முதல்‌ காலை 5 மணி வரையிலும்‌ இரவு நேர ஊரடங்கும்‌, ஞாயிற்றுக்‌ கிழமைகளில்‌ முழு ஊரடங்கும்‌ நடைமுறைப்படுத்தி, புதிய கட்டுப்பாடுகள்‌ விதித்து உத்தரவிட்டுள்ளது.

அரசின்‌ கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்திடும்‌ வகையில்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ 5 மண்டலத்திற்க்குட்பட்ட பகுதிகளில்‌ உள்ள உணவகங்கள்‌, திருமண மண்டபங்கள்‌, விருந்து அரங்கங்கள்‌, சமூக நலக்கூடங்கள்‌ மற்றும்‌ கோயில்கள்‌ ஆகியவற்றில்‌ பதிவு செய்யப்படும்‌ திருமணம்‌ போன்ற சுப நிகழ்ச்சிகள்‌ குறித்த விபரங்களை https://covid.ccmc.gov.in/ccmc/bookingintimation என்ற மாநகராட்சியின்‌ கோவிட்‌ இணையதளத்தில்‌ தெரியப்படுத்திட வேண்டும்‌.

Related posts

ஸ்டேட் வங்கி கிளார்க் நியமனங்கள் இட ஒதுக்கீடு முறையில் அமலாகிறதா? மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

The Thamizh News

தமிழகத்தில் மே 10 முதல் மே.24-ம் தேதி வரை முழு ஊரடங்கு..!

The Thamizh News

‘காவலர்களும் மனிதர்களே’ : பணிச்சுமையால் தவித்த திருச்சி காவலர்களின் பிரச்சனைக்குக் கிடைத்தது தீர்வு

The Thamizh News

Leave a Comment