பிரேக்கிங் நியூஸ்
கோவை செய்திகள் தமிழகம் முகப்பு

கோவையில் அபரிவிதமாக வளர்ந்துள்ள தனியார் ப்ளே ஸ்கூல்கள்.! ஏழை குழந்தைகள் பயன்பெறும் அங்கன்வாடி மையங்கள் சீர்ப்படுத்தப்படுமா.?

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்திய மாணவர் சங்கம் அங்கன்வாடி மையங்களை பாதுகாப்போம் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது.இதனடிப்படையில் நாடு தழுவிய இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்தது. அதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் அங்கன்வாடியை பாதுகாப்போம் என்ற கோரிக்கை மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் ஏழை குழந்தைகள் பயன்பெறும் அங்கன்வாடி மையங்களின் நிலைமை குறித்தும், குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் நிலைமை குறித்தும் பேசப்பட்டது.

மேலும் தற்போது அங்கன்வாடி மையங்களின் நிலைமை மோசமாக உள்ளதால், பெற்றோர்கள் கடனை வாங்கி தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்தும் நிலைமை உள்ளது. இந்த நிலைமை மாற அங்கன்வாடி மையங்களை தனியாருக்கு நிகராக வண்ணமயமாக்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்பட்ட கோரிக்கை தீர்மானங்களில் சில :-

1.கோவையில் வாடகையில் இயங்கிவரும் 400 அங்கன்வாடி மையங்களை சொந்த கட்டிடங்களாக கட்டிக் கொடுக்க வேண்டும் .

2. கோவையில் உள்ள 1654 சேதமடைந்த மையங்களை உடனடியாக ஆய்வு செய்து சீர் அமைத்திட வேண்டும்.

3.அங்கன்வாடி மையங்களை விளையாட்டுப் பள்ளிகள்( PLAY SCHOOL) அளவிற்கு தரம் உயர்த்தி வண்ண மயமாக்க வேண்டும்.

4. அங்கன்வாடி குழந்தைகளுக்கு காய்கறி மளிகைக்கு தற்போது வழங்கி வரும் ரூபாய் 1.20 பைசாவை 5 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.

5. அங்கன்வாடி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை சுயமரியாதையுடன் நடத்திட வேண்டும்.

6. அங்கன்வாடி மையத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

இந்த மாநாட்டிற்கு இந்திய மாணவர் சங்கத்தின் கோவை மாவட்ட துணைத் தலைவர் கயல்விழி தலைமை வகித்தார். தொடர்ந்து மாவட்ட குழு உறுப்பினர் அபிதா
வரவேற்று பேசினார். அதன் பிறகு மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட தலைவர் அசாருதீன் துவக்க உரையாற்றினார்.
சிறப்புரையாக முன்னாள் சத்துணவு சங்க மாநில செயலாளர் பழனிசாமி அங்கன்வாடி நிலைமைகளையும் அதன் ஊழியர்கள்படும் சிரமங்கள் பற்றியும் விரிவாக உரையாற்றினார்.மாநாட்டை நிறைவு செய்து மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா பேசினார்.

Related posts

வெட்டப்பட இருக்கும் மரங்களை மீட்கும் இளைஞர்கள்..!

The Thamizh News

கோவை தெற்கு தொகுதியில் 1189 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசன் தொடர்ந்து முன்னிலை..!

The Thamizh News

தி தமிழ் நியூஸ் : தெரிஞ்சுக்கோங்க? BOSS இன்றைய பொது அறிவு வினா

The Thamizh News

Leave a Comment