பிரேக்கிங் நியூஸ்
இன்று செய்திகள் தமிழகம்

இன்று குழந்தைகள் தினம்.! வெறுமனே குழந்தைகள் தினத்தைக் கொண்டாடலாமா.? நாம் உறுதி எடுக்க வேண்டியது என்ன.?

 

குழந்தைகள் மீது நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க இந்த சமூகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தோழமை இயக்க நிறுவனர் தேவநேயன் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளின் உரிமைக்காக செயல்படும் தோழமை இயக்க நிறுவனர் தேவநேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-

தொடர்ந்து குழந்தைகள் மீது பள்ளிகளில் நடக்கும் பாலியல் வன்முறைகளை கடந்து செல்ல முடியாது. எனவே அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு கொள்கையை உருவாக்கி முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பல்வேறு உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற தீர்ப்புகள் இருந்தும் தமிழ் நாட்டில் நடை முறைப்படுத்த வில்லை.

குழந்தைகள் மீது ஏதாவது நடந்து விட்டால் மட்டுமே நாம் தலையிடுகிறோம். நடக்காமல் இருப்பதற்கான பணிகளை செய்வதில்லை, என்பது தான் உண்மை.
வெறும் குழந்தைகள் தினம் மட்டும் கொண்டாடி பயனில்லை. குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பது என்பதுதான் உண்மையான குழந்தைகள் தினம்.

ஒவ்வொரு நாளும் எல்லா இடங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.எனவே குழந்தை பாதுகாப்புக்கான கலாசாரத்தை உருவாக்குவதற்கு குழந்தை உரிமை கல்வி அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தவேண்டும்.

குழந்தை பாதுகாப்புக்காக இருக்கிற அமைப்புகள் மற்றும் பணியாளர்கள் குழந்தைகள் மீது வன்முறை நடந்துவிட்டால் மட்டுமே பார்க்கிற அமைப்புகளாக, பணியாளர்களாக இல்லாமல் நடைபெறாமல் இருப்பதற்கான தடுப்பு பணிகளை(Prevention work) முதன்மையாக செய்ய வேண்டும்.
குழந்தைகளின் சிறந்த நலனை உறுதி செய்கிற சமூகமாக மற்றும் குழந்தைகளுக்கு உகந்த,உரிய உதவக்கூடிய நபர்களாக நாம் இருக்க வேண்டும். குழந்தை நேய மற்றும் பாதுகாப்பு சமூகத்தை உருவாக்க நாம் பாடுபடுவோம் என்று உறுதி ஏற்பதே இந்தக் குழந்தைகள் நாள் சிறப்பானதாக இருக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

மீண்டும் உக்கடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்படுகிறதா..? தகவலால் கிளம்பியுள்ள எதிர்ப்பு.!

The Thamizh News

வேளாண் சட்டங்களை எதிர்த்து தபால் நிலைய முற்றுகையில் ஈடுபட்ட கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர்!

The Thamizh News

கோவையில் நேற்று பெய்த கனமழை.! பாலங்களில் தேங்கி நிற்கும் மழை நீர்.!

The Thamizh News

Leave a Comment