பிரேக்கிங் நியூஸ்
கோவை தமிழகம்

கோவையில் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய வியாபாரி.!அதிர்ச்சியடைந்த சம்பவம்.!

கோவை கணபதி அருகே இரும்பு வியாபாரி வீட்டில் இருந்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணபதி மணியகாரம்பாளையம் வேலவன் நகர் எக்ஸ்டென்ஷனில் வசித்து வருபவர் தினகரன். இரும்பு வியாபாரியான இவர் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று இன்று அதிகாலை வீடு திரும்பினார்.

அப்போது வீட்டினுள் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று அவர் பார்த்தபோது,
வீட்டின் மாடிக்கதவை உடைத்து உள்ளே வந்த திருடர்கள் இரும்பு பெட்டகத்தில் வைத்திருந்த 131 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தினகரன் சரவணம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். பின்னர் வந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து கொள்ளையர்கள்..யார்.? எப்படி வந்தனர்..? அவர்களின் அடையாளம் என்ன.? என சிசிடிவி காட்சிகள் மூலம் தேடும் பணியை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.

Related posts

வாக்கு எண்ணிக்கை (மே-2)அன்று முழு ஊரடங்கு பொருந்தாது..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

The Thamizh News

ஆன்லைன் தேர்வு அச்சத்தில் மாணவர்கள்! தேர்வு எழுதும் முறைகளை வெளியிட்டுள்ள பல்கலைக்கழகம்!!

The Thamizh News

சிறுமிக்கு திருமண ஆசைகாட்டி கடத்திச் சென்ற டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது.

The Thamizh News

Leave a Comment