ஐந்து வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டுமா மற்றும் ரெம்டெசிவிர், ஸ்டீராய்ட் மருந்துகள் குறித்த தகவல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
18 வயதுக்குட்பட்டவர்களுக்கான கோவிட்-19 புதிய வழிகாட்டுதல்கள் வெளியாகியுள்ளது :-
5 வயது மற்றும் அதற்குட்பட்ட வயதுடைய குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது அவசியமில்லை.
6 முதல் 11 வயதுடைய குழந்தைகள், பெற்றோரின் வழிகாட்டுதலின் அடிப்படையில், முகக்கவசம் அணியலாம்.
12 முதல் 18 வயதுடைய குழந்தைகளும் சரியான முறையில், பெற்றோரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் முகக்கவசம் அணியலாம்.
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தேவையானால் மட்டுமே மட்டுமே ஸ்கேன்களை எடுக்கவேண்டும். தேவைப்பட்டால் எச்ஆர்சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கலாம்
கோவிட் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் ரெம்டெசிவிர் மற்றும் இதர அங்கீகாரம் பெற்ற மருந்துகள் எதுவும் குழந்தைகளுக்குக் கொடுக்க பரிந்துரைக்கப்படவில்லை.
18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரெம்டெசிவிரின் பயன்பாடு பாதுகாப்பானது என்பது தொடர்பாக எந்த உறுதியான ஆய்வு முடிவுகளும் இல்லை.
கோவிட் பாதிப்பு குறைவாக இருக்கும், அறிகுறி இல்லாத குழந்தைகளுக்கு ஸ்டீராய்ட் மருந்துகள் கொடுக்கப்படக் கூடாது. அது உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.