நாளை(03-07-21) கோவை மாநகராட்சிக்குட்பட்ட சுகாதார நிலையங்களில் பணிபுரிய கோவை டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது.
கோவை மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டுவரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள துணை சுகாதார நிலையங்களில் 20
தற்காலிகமாக துணை சுகாதார/நகர செவிலியர்கள் நேர்காணல் மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.
அவர்களுக்கு மாதம் ரூ.11 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும். தகுதியுடைய நபர்கள் (குறைந்தபட்சம் கல்வி தகுதி B.Sc Nursing, Diploma Nursing Midwife (GNM) / Auxiliary Nurse-Midwife (ANM) ஆகிய ஏதேனும் படிப்பில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தில் அவசியம் பதிவு
செய்திருத்தல் வேண்டும்.
நாளை (3ம் தேதி) காலை 10 மணிக்கு அனைத்து அசல் மற்றும் ஒரு நகல் ஆவணங்களுடன், இணைப்பில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து டவுன்ஹால் மாநகரட்சி பிரதான அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டும்.
இவ்வாறு மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
தேவையான ஆவணங்கள் :
கல்வி சான்றிதழ்
இருப்பிட சான்று
சாதிச்சான்று
ஆதார் அட்டை